முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு பெண் ஆணை அடிப்பது தீர்வா..? இப்படியே வாழ்வது தான் விதியா.. !

வழக்கமான சேட்டன்கள் மொழியில் கொஞ்சம் குடும்ப உளவியல் பேசியிருக்கும் படம். சும்மா பெண்ணோட சுதந்திரம், நீதி, சமத்துவம் மட்டுமே பேசல. நாம் வாழும் சமூகத்தோட போலி தன்மையை இந்த படம் கடைசி வரை பேசிட்டே வருது. அதுவும் நுட்பமாக.


புருசன் அடிச்சா திருப்பி அடிப்பேன். இப்டி ஒரு பொண்னு முடிவெடுத்தா இந்த சமூகம் என்ன நினைக்கும். அந்த குடும்பம் என்ன நினைக்கும். முக்கியமா புருசன் என்ன நினைப்பாங்கிறதுதான் படம்.

ஜெயா பிறந்ததில் இருந்தே அவளுக்கு சாய்ஸே இல்லை. எல்லாமே சான்ஸ் தான். அதை அவ தக்க வைக்கனும் அதுக்கு தானே கலாச்சாரம் பண்பாடு எல்லாமே இருக்கு.  நம் சமூகத்தில் பெண்களுக்கு கிடைக்கிற எல்லாமே சான்ஸ் தானே. அவர்களால் தேர்வு செய்ய பெரிதாக வாய்ப்பு இல்லை. நல்ல மார்க்க எடுத்தாலும்  இது நம்மாளுக(?!) காலேஜ், பெரியப்பாவோட சித்தப்பா மக வயித்து கொழுந்தியா இந்த காலேஜ்ல புரொபசர் இருக்கா, வீட்டு பக்கத்தில இப்படித்தான் அமையும். விருப்பபட்ட கல்லூரியோ, படிப்போ நடுத்த குடும்பங்களில் பெரும்பாலும் வாய்ப்பில்லை. இன்றைக்கு கொஞ்சம் மாறியிருந்தாலும் எல்லாருக்குமான வாய்ப்பாக இது அமையவில்லை.  படிப்பு, ஆடைகள், வாய்ப்புகள் என எல்லாவற்றிலும் பெண்ணின் மீதான சமூக அக்கறை எப்போது கலாச்சாரம் பண்பாடு ஆணாதிக்கம் என்ற  வகையில் தான் இருக்குமே தவிர அவளுடன் உரையாடி எடுத்த முடிவாக இருக்காது.

படத்தின் முக்கியமான காட்சியாக நான் கருதுவது பெண்பார்க்கும் படலம் தொடங்கி திருமணமாகும் வரையான காட்சி. மனிதர்களின் செயற்கை சிரிப்பு, செயற்கை பாராட்டு, செயற்கை அக்கறை என வழிந்தோடும் சமூக இயல்பை படம் அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறது. அல்லது அம்பலப்படுத்தியிருக்கிறது.

எதுவுமே தன் தேர்வாக இல்லாத போது ஏன் பொறுத்து போகவேண்டுமென்ற பெண்ணின் கோவம் தான் திருப்பி அடித்தல் என்பது.  அதனை ஹீரோயின் செய்கிறார். அப்போதும் தன் தவறை உணராத அந்த சமூக பிம்ப கணவன் அவளை அடிக்க அவனும் கற்றுக்கொள்கிறான். ஆனால் எல்லாம் கிடைத்து போராடும் ஒருவனுக்கும்,  எதுவுமே கிடைக்காமல் போராடும் ஒருவளுக்குமான போட்டியில் யார் இறங்கி அடிப்பார்கள். அதுதான் இங்கே நிகழ்கிறது.  ஆனாலும் ஆண் விட்டுவிடுவாரா ?

குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகிவிடும், அவளை அடக்கிவிடலாம்,  எல்லாம் சரியாகிடும்னு இங்கே தான் ஒரு நியாயம் இருக்கே.. புள்ள பொறந்த பிறகு எதுக்கு அதெல்லாம் என பெண்களின் எல்லா உணர்வுகளையும் வலிகளையும்  தோண்டி புதைக்கலாமே ? அதை நோக்கி நகர்கிறான் சமூக பிம்ப கணவன். அதிலும் நடிக்க வரவில்லை. மாட்டிக்கொண்டு டைவோர்சில் முடிகிறது.

ஒரு பெண் ஆணை அடிப்பது தீர்வா என்றால் ? ஏன் தீர்வாக இருக்க முடியாது என்பது தான் என் கேள்வி. வேலைப்பளூ, குடும்பபாரம், மனச்சுமை அதனால் ஆண் அடிக்கிறான் என்றால், இது எதுவுமே இல்லாத வேற்றுலகிலா பெண் வாழ்கிறாள். அவளுக்கும் அது எல்லாம் உண்டுதானே. அவளும் அடிப்பாள். இங்கே அடி தீர்வில்லை என்றால் உரையாடு. அங்கே எல்லாம் மாறும். நீ உரையாட தயார் என்றால் அவள் காதுகள் கிடைக்கும். இல்லையேல் கொடுப்பது கிடைக்கும்.

ஆனால் உரையாடவே தெரியாத ஆண்கள் அதிகம் உண்டு இங்கே .அவர்களுக்கு ஜெயா மொழியில் தான் பதில் கிடைக்க வேண்டும்.

எல்லா ஆண்களும் அப்படியா என்ற கேள்விக்கும் படத்திலே பதில் உண்டு. அவளுடைய அண்ணன். அவனுக்கும் அவளின் வலியோ தேடலோ தேவையோ ஒன்றும் புரியவில்லை. ஆனால் அப்பா  ஆணாதிக்க திமிர் போல தங்கையை விடாமல்  அவனுக்கு தெரிந்த வழியில் அவன் உரையாடுவான். அவனுக்கு சிறுவயது முதலே கொடுக்கப்பட்ட ஆண் நெடில் வாடை தாண்டி அவன் அவளுடன் பயணிப்பான். இதுவும் படத்தில் காட்சியாக வந்திருக்கும்.

ஆம். இப்போது சில ஆண்கள் மாறியிருக்கிறார்கள். அது ஏதோ அவர்களின் கொடையல்ல. அவர்களின் விட்டுக்கொடுத்தல் அல்ல. பெண்களின் கேள்வி. ஆமால்ல, அவளுக்கும் அப்படித்தானே  என யோசிக்க தொடங்கி  மாறி இருக்கிறார்கள். 

இந்த படம் ஒரு நாடக தன்மையில் இருந்தாலும், உளவியல் உண்மையை கொஞ்சம் நெருக்கமாக பேசுகிறது. குறிப்பாக ஆணின் குற்றவுணர்ச்சி, தோல்வியை ஏற்றுக்கொள்ளாத திமிர், இவளை அடக்க வேண்டுமென்ற போலி அன்பின்  வெளிப்பாடு, எல்லாம் இழந்த வலி என இயல்பாய் ஏனைய பாத்திரங்களும் கொஞ்சமும் தடம் மாறாது பயணிக்கிறது.

எனக்கு சப்பாத்தி வேண்டும், இடியாப்பம் வேண்டும், சிக்கன் வேண்டுமென உக்காந்த இடத்தில் ஆர்டர் இடுவதில் தவறில்லை. இதன் உழைப்பில் என் பங்கு என்ன என்பதில் இருக்கிறது  என் மனைவியின், என் அம்மாவின், என் சகோதரியின் மீதான அன்பும் மரியாதையும். நீங்கள் அலுவலகத்தில் வேலை என்றால் மனைவிக்கு அலுவலகம் + வீடு, அல்லது வீட்டில் வேலை. உங்களுக்கு சம்பளம் உண்டு. மனைவியின் வீட்டு வேலைக்கு சம்பளம் என்பது பகிர்தல் தான்.

வேலையை பகிர்தல், பொறுப்பை பகிர்தல், இப்படி பகிர்ந்துகொள்ளுதல் தான். நீங்க கொஞ்சம் பகிர்ந்து கொண்டால் விரைவில் உங்களுக்கு சுமையே இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள்.

படம் பார்க்க வேண்டிய படம். வெறும் திருப்பி அடிக்கிறானு மட்டும் பார்க்காதிங்க.. இன்னும் பல நுட்பங்கள் இருக்கிறது. அம்மாவின் இடியாப்ப வலி, சகோதரியின் குண்டச்சி வலி,  அம்மா அப்பாவின் போலியான வார்த்தை சுதந்திரம், மாமா என்ற உறவின் பொய்யான அறிவுரைகள் என படம் நிறைய பேசியிருக்கிறது. படத்தில் ஒரு வசனம் வரும்..

ஆம்பள இல்லாம பொம்பளா சந்தோஷமா இருக்க முடியும். ஆனா பொம்பளா இல்லாம ஆம்பள வாழ கூட முடியாது என வரும். அது வசனம் அல்ல உண்மை. மனைவி இறந்த பின்னரான வாழ்வு வாழும் ஆண்களின் உலகை எட்டிப்பாருங்கள். தெரியும். புரியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியல் செய்யும் நடிகர் சூர்யா

இங்க நிறைய பேருக்கு 'அரசியல்' என்றாலே ஓட்டு வாங்கும் அதிகார அரசியல் மட்டுமே என நம்புவார்கள்.  அறிஞர் அண்ணாவும் , கலைஞர் கருணாநிதியும் அரசியலில் இருந்து சினிமாவை பயன்படுத்திக் கொண்டவர்கள். எம்ஜியார் சினிமாவில் இருந்துகொண்டு அரசியலை பயன்படுத்திக் கொண்டு பின்னர் நேரிடை அரசியலுக்கு வந்தவர்.  சினிமாவில் இருந்து நேரிடையாக அரசியல் என வரும் கோமாளிகளை தமிழ்நாடு சிரித்தபடியே வழி அனுப்பி வைக்கும். தமிழ்ச் சினிமா வரலாற்றில் சினிமா மூலம் உண்மையான அரசியலை செய்பவர் நடிகர் சூர்யா தான். கல்வி தான் ஒருவரை சமூகம் நோக்கி நகர்த்தும் என்பதை வெகுவாக கவனித்து அதனை தேர்வு செய்து பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.  இத்தனைக்கும் சூர்யாவைவிட அதிகம் சம்பளம் வாங்கு நடிகர்கள் பலர் ஏற்கனவே திருமணமான தன் மன்றத்து ஆட்களுக்கு திருமணம் செய்து சேவை என சொல்லிவருகிறார்கள். அல்லது ரசிகர்களே நிதிதிரட்டி செலவழிக்கும் சேவைகளை தங்கள் கணக்கில் எழுதி பொய்யாய் பெருமிதம் கொள்வர்கள். இவையெல்லாம் ரசிகனை காவுகொடுப்பதுதான். சூர்யா உருவாக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நே...

அன்பும் வன்முறையும்: அதிர்ச்சியான நேர்மையான உணர்வு

இந்த உலகத்தில்  ஆகப்பெரிய வன்முறை எது தெரியுமா..?  அன்பா இருக்கிறதுதான். பெரும்பாலும் அன்பும் வன்முறையும் எப்போதும் ஒரே அடிப்படையில் தான் இயங்கும். அன்பும் வன்முறையும் நான்தான் சரினு ஒரு கட்டத்தில நகர்ந்து நிக்கும்.  அன்பா இருக்கிறது வன்முறையானு கேட்டா அப்டி இல்லை. அன்பா இருக்கிறதுக்குனு ஒவ்வொரு உறவும் ஒரு விதிமுறையை உருவாக்கி வச்சிருக்கும். code of ethics மாதிரி.  அந்த நெறிமுறைதான் பிரச்சினை. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நெறிமுறை. இவருக்கு அன்பை இப்படி சொல்லனும். அவருக்கு அப்டி சொல்லனும். இந்த டைம் டேபிள் தான் அன்புனு ஒரு காலத்திலே பதிஞ்சு போகும். அந்த டைம் டேபிள் கொஞ்சம் மிஸ் ஆனா நீங்க அன்பா இல்லைனு ஆகிபோகும். எந்தெந்த உறவுகள்ள எல்லாம் பிரச்சினைனு பார்த்தா பல உறவுகள்ள இந்த டைம் டேபிள் தான் பிரச்சினை.  அன்பா இருக்கிறதுக்கு ஒன்னுமே செய்ய தேவையில்லைனு இங்க புரியல. சாய தோளும் கேட்க காதும் போதும்னு தான் அன்பு தொடங்கும். ஒரு கட்டத்தில அது இல்லாமலே நிறைய நிரம்பி போகும். இதுல என்ன பெரிய காமெடின்னா நமக்கு ஒருத்தர் அன்பு டைம்டேபிள் போட்டு  நிக்க வச்சா, நாம இன்னொருத்தர...

தமிழ்நாட்டில் இருப்பதாலே பாலாவின் சர்ச்சைகள் மட்டுமே பேசப்பட்டு வருகிறதோ..?

தமிழ் சினிமா இயக்குனர்களின் உச்சபட்சம் அடையாளங்களில் ஒருவர் இயக்குனர் பாலா. அவரது சேது , அவன் இவன் ஆகிய படங்களை தவிர வேறு எந்தவொரு படத்தின் ஒரு பிரேமை கூட இன்னொருவர் யோசிக்க முடியாது. காட்சிப்படுத்திவிட முடியாது .  சேது (1999), நந்தா (2001), பிதாமகன் (2003), நான் கடவுள் (2009), அவன் இவன் (2011) , பரதேசி (2012), தாரை தப்பட்டை (2016), நாச்சியார்(2018) என நீள்கிறது இவரது இயக்குனர் வாழ்க்கை.  நந்தா மற்றும் பரதேசி படங்களில் அவர் கையாண்டிருக்கும் திரை மொழி ரொம்பவே அடர்த்தியானது. இதற்கு முன்னர் இப்படியான வடிவில் படங்கள் வந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. நந்தா படத்தில் சூர்யாவின் கேரக்டரை உருவாக்கிய விதம் பயன்படுத்திய விதம் அதன் உடல்மொழி எல்லாமே திரைப்பட கனவுகளில் இருப்போர் கவனிக்க வேண்டியது.  பரதேசி படத்தில் அந்த பாதிரியார் கேரக்டரை கோமாளியாக்கி சறுக்கி இருந்தாலும் அந்த படமும் ஒரு பாடம் தான். கேமரா தொடங்கி ஒவ்வொரு பிரேமும் நமக்கு பாடம் சொல்லித்தரும். நான் கடவுள் படத்தை இன்னும் கொஞ்சம் புரியும்படி எடுத்திருக்கலாம் என்பது என் பார்வை. திரைமொழி ஆக்கலில் அந்த படத்தின் கடைசி...